×

சக்தி அறக்கட்டளை தலைவர் திமுகவில் இணைந்தார்

நாமக்கல், பிப்.17: நாமக்கல் சக்தி அறக்கட்டளை தலைவர், சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். நாமக்கல் சக்தி கல்வி கலாச்சார அறக்கட்டளை தலைவர் சக்திவேல்(49). இவர், நேற்று சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். அப்போது, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஸ்குமார், நகர பொறுப்பாளர் ஆனந்த், புதுச்சத்திரம் ஒன்றிய செயலாளர் கதவுதம் உள்ளிட்டோர் உடனிருந்தனர். சக்திவேல் கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நாமக்கல் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டார். சக்திவேல் தமிழ்நாடு சோளிய வேளாளர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவராகவும் இருந்து வருகிறார்.

Tags : Shakti Foundation ,DMK ,
× RELATED கொள்ளிடத்தில் பயணிகள் நிழற்குடை...