×

மனநல விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாமக்கல், பிப்.17:  நாமக்கல் மாவட்ட மன நல திட்டத்தின் சார்பில், சீதாராம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மனநல விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நாமக்கல் மாவட்ட மன நல திட்டத்தின் சார்பில், சீதாராம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மனநல விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.  மருத்துவ அலுவலர் செங்கோட்டுவேல் தலைமை வகித்தார். இதில், மன நல மருத்துவர் குணமணி பேசுகையில், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை தர வேண்டும்.

மனநோயாளிகள் மருத்துவ வசதிகளை நாடி நெடுந்தூரம் செல்லும் நிலை தவிர்த்து, கிராமங்களிலேயே மனநல வசதிகளை உருவாக்க வேண்டும். மனநலத் திட்டத்தின் கீழ் மனநலப் பயிற்சி, மனநல மருத்துவ சிகிச்சை மற்றும் மனநல விழிப்புணர்ச்சி ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படும். கண்டிப்பாக, ஏழு அல்லது எட்டு மணிநேர தூக்கம் அவசியம் என்றார். இதில் சுகாதார செவிலியர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED சீர்வரிசை தட்டுகளுடன் வாக்களிக்க அழைப்பு