×

ராசிபுரம் பகுதியில் மயில்களால் பயிர்கள் சேதம்


ராசிபுரம், பிப்.17: ராசிபுரம் அருகே மயில்களின் தொல்லையால், பயிர்கள் சேதமடைவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ராசிபுரம் அருகே வெண்ணந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான நொச்சிப்பட்டி, கல்கட்டானூர், அத்தனூர், செளரிபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும், புதுச்சத்திரம் அருகே கல்யானி, கண்ணூர்பட்டி, கதிராநல்லூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நெல், சோளம், பருத்தி, வெங்காயம், மக்காசோளம் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில், விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், அப்பகுதியில் மயில்களின் தொல்லை அதிகரித்துள்ளது.

வனப்பகுதியில் ஏற்பட்ட வறட்சியால், மயில்களுக்கு தேவையான உணவு கிடைக்காமல், விளை நிலங்களில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. மேலும் குடிநீருக்காக சொட்டுநீர் பைப்களை சேதப்படுத்தி வருகின்றன. மயில்கள் தேசிய பறவை என்பதால், அதனை விவசாயிகள் வேட்டையாடவோ, அடிக்கவோ முடியாது. வயல்களில் மயில்களால் பயிர்ச்சேதமடைவதை தடுக்க வேண்டும் என வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, விளைநிலங்களில் மயில்கள் நுழைவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Rasipuram ,area ,
× RELATED ராசிபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து