×

திருச்செங்கோட்டில் பிளாஸ்டிக் பயன்பாடு தடுப்பு விளக்க கூட்டம்

திருச்செங்கோடு, பிப்.17:  திருச்செங்கோட்டில், நகராட்சி மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக்  பைகள் தடை செய்யப்பட்டது தொடர்பான கூட்டம் நடந்தது. நகராட்சி கூட்டரங்கில் நடந்த கூட்டத்திற்கு, நகராட்சி ஆணையாளர் சையது முஸ்தபா கமால் தலைமை வகித்தார். நகராட்சி  பொறியாளர் குணசேகரன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக சேலம் மண்டல நகராட்சிகள் நிர்வாக இயக்குநர் அசோக்குமார் மற்றும் மண்டல நிர்வாக  பொறியாளர் கமலநாதன்  ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் திருச்செங்கோடு நகரில் உள்ள பிரபல வணிக   நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், சாலையோர வியாபாரிகள் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர்.

ஒருமுறை மட்டுமே பயன் படுத்தக்கூடிய பிளாஸ்டிக்  பைகள் தடை செய்யப்பட்டது தொடர்பாகவும், அதற்கு மாற்றாக பயன்படுத்தக்கூடிய பொருட்கள் குறித்தும்  மாசு கட்டுப்பாடு வாரிய உதவிப் பொறியாளர் தீனதயாளன் விளக்கி பேசினார். வியாபாரிகள் தங்களுக்கு ஏற்படும் சிரமங்கள், மாற்றுப் பொருட்கள் கிடைக்காதது மற்றும் தடை செய்யப்பட்ட பொருள் குறித்த விளக்கம்,  தேவையாள அளவு கால நீட்டிப்பு, அபராதம் விதித்தல்  உள்ளிட்டவற்றை முறைப்படுத்த வேண்டும் என  கோரிக்கை  வைத்தனர். வியாபாரிகளின் கேள்விகளுக்கு சேலம் மண்டல நகராட்சிகள் நிர்வாக இயக்குநர் அசோக்குமார் மற்றும் மண்டல நிர்வாக  பொறியாளர் கமலநாதன்  ஆகியோர் பதிலளித்தனர்.

Tags : Plastic Prevention Meeting ,Tiruchengode ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னேற்பாடுகள் தீவிரம்