×

தேய்பிறை அஷ்டமியையொட்டி கிருஷ்ணகிரி காலபைரவர் கோயிலில் சிறப்பு வழிபாடு

கிருஷ்ணகிரி, பிப்.17: கிருஷ்ணகிரி அருகே உள்ள காலபைரவர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கிருஷ்ணகிரி  அருகே உள்ள கல்லுக்குறிக்கி பெரிய ஏரி மேற்கு கோடிக்கரையில் 300 ஆண்டு பழமையான காலபைரவர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு தேய்பிறை  அஷ்டமியன்றும், சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. அதன்படி, நேற்று காலை 11 மணிக்கு சிறப்பு யாகம் நடந்தது. பின்னர், காலபைரவருக்கு பூஜைகள், அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. காலபைரவர்  வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சியில், 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூசணி, தேங்காய் மற்றும் அகலில்  விளக்கேற்றி தங்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். நீண்ட வரிசையில்  காத்திருந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ததர்.

அவர்களுடன் கிருஷ்ணகிரி டாக்டர். செல்லக்குமார் எம்.பி.யும் சுவாமி தரிசனம் செய்தனர். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு வரவேற்பு  அளிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில்  கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி அண்டைய மாநிலங்களான கர்நாடகா,  ஆந்திராவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் அறக்கட்டளை நிர்வாகிகளும், காலபைரவரை  குலதெய்வமாக வழிபடும் 165 கிராமத்தினரும் செய்திருந்தனர்.

Tags : Krishnagiri Kalaviravar Temple ,Teabai Ashtami ,
× RELATED விழிப்புணர்வு பிரசாரம்