×

ஓசூரில் லாரி திருடியவர் கைது

ஓசூர், பிப்.17: ஓசூர் காந்தி நகரைச் சேர்ந்தவர் கந்தன்(44). விவசாயியான இவர், லாரி தொழிலும் செய்து வருகிறார். சம்பவத்தன்று தனது டிப்பர் லாரியை ஓசூர் காந்தி நகர் பகுதியில் நிறுத்தி வைத்திருந்தார். அப்போது, அங்கு வந்த ஒருவர் லாரியை திருட முயன்றார். இதை கவனித்த கந்தன், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த நபரை மடக்கி பிடித்து ஓசூர் ஹட்கோ போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் அவர் ஓசூர் மூக்கண்டப்பள்ளி அருகே உள்ள அரசனட்டியைச் சேர்ந்த சின்னதுரை (25) என்பது தெரிய வந்தது. உடனே, அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags : Hosur ,
× RELATED பெரியபாளையம் அருகே சென்டர் மீடியனில் லாரி மோதி விபத்து