×

பன்றி வேட்டைக்கு சென்ற போது கரி மருந்துடன் வாலிபர் கைது


தேன்கனிக்கோட்டை, பிப்.17: தளி அருகே, காட்டுப்பன்றி வேட்டைக்கு வெடி தயார் செய்ய 50 கிராம் கரி மருந்து வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். தளி எஸ்ஐ சிவராஜ் மற்றும் போலீசார், நேற்று ஒசபுரம் கூட்டுரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர், போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார். இதில், சந்தேகமடைந்த போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தனர். இதில், அவர் தளி அருகே ராம்நகர் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் மகன் கணேசன்(23) என்பதும், காட்டுப்பன்றி வேட்டைக்காக செல்வதும் தெரிய வந்தது. அவரிடம் நடத்திய சோதனையில் இருசக்கர வாகனத்தில் 50 கிராம் கரி மருந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே, கரி மருந்தை கைப்பற்றிய போலீசார், கணேசனை கைது செய்து சிறையிலடைத்தனர்.

Tags :
× RELATED வேலூர் மாவட்டம் அரியூரில்...