×

விவசாயி தற்கொலை

தேன்கனிக்கோட்டை,  பிப்.17: தேன்கனிக்கோட்டை அருகே, கோட்டை உலிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ராஜகோபால் மகன் விஜிகுமார்(31). விவசாயியான இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். விஜிகுமாருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. மேலும், தீராத வயிற்று வழியால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால், நேற்று வழக்கம்போல் அதிகளவில் மது குடித்துள்ளார். பின்னர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விஜிகுமார் மனைவி நேத்ரா தேன்கனிக்கோட்டை காவல்  நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : suicide ,
× RELATED விவசாயி தற்கொலை