×

போதையில் தடுமாறி விழுந்த தொழிலாளி சாவு

கிருஷ்ணகிரி, பிப்.17: வேப்பனஹள்ளி அருகே பெரியதம்மாண்டரபள்ளி பகுதியைச் சேர்ந்தவர் முனியப்பன்(47). கூலி தொழிலாளியான இவர், கடந்த மாதம் 24ம் தேதி குடித்து விட்டு, போதையில் வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார். அப்போது, நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் முனியப்பன் உயிரிழந்தார். இதுகுறித்து வேப்பனஹள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED கொரோனா வைரஸ் குறித்து வதந்தி பரப்பிய...