×

நாட்டுநலப்பணி சிறப்பு முகாம்

அருப்புக்கோட்டை, பிப்.17: அருப்புக்கோட்டை சௌடாம்பிகா பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டுநல பணித்திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாம் தூய்மைப்பணியில் இளைஞர்கள் என்ற தலைப்பில் அருப்புக்கோட்டை அருகே கட்டங்குடி, குளத்துப்பட்டி கிராமத்தில் நடந்தது. கல்லூரி செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். தலைவர் சொக்கலிங்கம், பொருளாளர்கதிர்வேல், உபதலைவர் செந்திவேல் முன்னிலை வகித்தனர். முதல்வர் சந்திரா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் மணிமாறன் கலந்து கொண்டார். முகாமில் மரம் நடுதல், வாக்காளர் விழிப்புணர்வு, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு,

சமூக விழிப்புணர்வு, தொழிற்கல்வி விழிப்புணர்வு, பொது மருத்துவமுகாம், பிளாஸ்டிக் மற்றும் மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வுகள் நடந்தது. மருத்துவர் பரிமளச்செல்வன், வழக்கறிஞர்கள் தங்கவடிவேல், செல்லப்பாண்டி, அரசு மருத்துவமனை ஐசிடிசி கவுன்சிலர் சிவக்குமார், ராஜயோக ஆசிரியர் மீனாட்சி சுந்தரம், துணைமுதல்வர் கந்தவேல்ச்சாமி, திட்ட அலுவலர் ஜாய் ஜான்சி, ஆசிரியர் செல்வம், விஏஓ பிரித்விராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Frontier Special Camp ,
× RELATED கல்லூரி முன்னாள் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி