×

சிவகாசியில் புதிய அமைப்பை தொடங்கிய 54 ஊராட்சி மன்ற தலைவர்கள்

சிவகாசி. பிப்.17: சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 54 ஊராட்சி மன்ற தலைவர்கள் சேர்ந்து புதிய அமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் 54 ஊராட்சிகள் உள்ளன. கடந்த மாதம் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 54 ஊராட்சி மன்றத் தலைவர்களும் சேர்ந்து புதிய அமைப்பு ஒன்றை தொடங்க முடிவு செய்தனர். அதன்படி 54 ஊராட்சி மன்றத் தலைவர்களும் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் சிவகாசி அருகே சாட்சியாபுரத்தில் நடைபெற்றது. நாரணாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தேவராஜன் தலைமை வகித்தார். சித்துராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் லீலாவதிசுப்புராஜ் முன்னிலை வகித்தார்.

இதில் சிவகாசி ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு என்ற பெயரில் புதிய அமைப்பு தொடங்கப்பட்டது. புதிய அமைப்பின் செயலாளராக ஆனையூர் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமிநாராயணன் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒருங்கிணைப்பாளராக பாண்டிச்செல்வி, கோமதிசங்கர், ஆலோசகராக முருகானந்தபாண்டியன், இணைச் செயலாளர்களாக நாகராஜன், காளீஸ்வரி, கோவிந்தம்மாள், வினோதினி, அபிமன்னன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு ஏற்படும் நெருக்கடிகள், கோரிக்கைகள், கிராம பொதுமக்களின் பிரச்னைகளை இந்த அமைப்பின் மூலம் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Tags : panchayat leaders ,Sivakasi ,organization ,
× RELATED சிவகாசியில் பட்டாசு மூலப்பொருள் உற்பத்தி குடோனில் பயங்கர வெடி விபத்து