×

கபடி போட்டி

வருசநாடு, பிப். 17: மயிலாடும்பாறை அருகே, முத்தாலம்பாறை ஊராட்சியில் ‘சிங் வாரியர்ஸ்’ நடத்தும் மூன்றாமாண்டு கபடி போட்டி நடைபெற்றது
இதில், மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு, வருஷநாடு, சிங்கராஜபுரம், மூலக்கடை, உப்புத்துறை, சிறப்பாறைம், சோலைத்தேவன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து கபடி குழுக்களைச் சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில், ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன், கடமலை மயிலை ஒன்றிய திமுக செயலாளர் வக்கீல் சுப்ரமணி, முத்தாலம்பாறை ஒன்றிய கவுன்சிலர்
தமிழ்ச்செல்வன், கடமலைக்குண்டு சார்பு ஆய்வாளர் அருண்பாண்டி, திமுக மாவட்ட பிரதிநிதி மாடசாமி,

முத்தாலம்பாறை ஊராட்சி மன்ற தலைவர் அமுதா அய்யணன், மந்திசுனை மூலக்கடை ஊராட்சி தலைவர் சுப்பிரமணி, சிங்கராஜபுரம் ஊராட்சி மன்றதலைவர் நாகராஜ், திமுக ஊராட்சி செயலர் கருப்பையா, திமுக இளைஞரணி பிரபு, மற்றும் முத்தாலம்பாறை சிங் வாரியர்ஸ் கபடி குழு உறுப்பினர்கள் மருதுபாண்டியன், திவான், தினேஷ், கவியரசு, அஜய்குமார், கிராம பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Tags :
× RELATED டோக்கியோ ஒலிம்பிக் போட்டி 2021 ஜூலை 23ல் தொடங்கும்: ஐஓசி அறிவிப்பு