×

மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா


கம்பம், பிப்.17: கம்பத்தில் உள்ள ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் 20வது பட்டமளிப்பு விழா, கல்லூரி செயலர் கம்பம் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இணைச் செயலர் வசந்தன் முன்னிலை வகித்தார். முதல்வர் ரேணுகா அறிக்கை சமர்ப்பித்தார். மதுரை வருமானவரித் துறையின் துணை கண்காணிப்பாளர் டாக்டர் ரூபா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து 2015-18ம் கல்வியாண்டில் இளங்கலை மற்றும் முதுகலை பயின்ற மாணவிகளுக்கும், ஆய்வியல் நிறைஞர் பயின்ற மாணவிகள் என மொத்தம் 430 மாணவிகளுக்கு பட்டப் படிப்புச் சான்றிதழ்களை வழங்கினார்.

பல்கலைக்கழக தரம் பெற்ற 14 மாணவிகள் பதக்கமும், தரச்சான்றிதழும் பெற்றனர். யோகா பாடப்பிரிவில் 242 மாணவிகள் பட்டயச் சான்றிதழ் பெற்றனர். இந்நிகழ்ச்சியில் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி, கல்லூரி ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் கோபாலகிருஷ்ணன், சுப்ரமணியன், பொன்னுராம், சக்திவடிவேல் மற்றும் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவிகள் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

Tags : Graduation ceremony ,Ladies College ,
× RELATED புள்ளிமான் பள்ளியில் பட்டமளிப்பு விழா