×

பஸ் மோதி தொழிலாளி பலி

போடி, பிப். 17: போடி அருகே உள்ள சிலமலை கிராமத்தை சேர்ந்த வெங்கிடாசலம் மகன் மூர்த்தி (50), கூலித்தொழிலாளி. இவர், சில்லமரத்துப்பட்டி கிருஷ்ணா கார்டன் அருகே மெயின் ரோட்டை கடந்தபோது, தேவாரம் சென்ற தனியார் பஸ், அவரின் பின்னால் மோதி தூக்கி வீசியது. இதில், மூர்த்தி பலத்த காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, போடி அரசுமருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியில் இறந்ததாக தெரிவித்தனர். மூர்த்தி மகன் கொடுத்த புகாரின்பேரில், போடி புறநகர் போலீசார் வழக்குப்பதிந்து தனியார் பஸ் ஓட்டுநர் பெரியகுளத்தை சேர்ந்த முருகேசனை விசாரித்து வருகின்றனர்.

Tags : Bus collision ,
× RELATED தெலங்கானாவில் பயங்கர விபத்து லாரி...