×

ரேக்ளா ரேஸ் காளைகளுக்கு பயிற்சி

வருசநாடு, பிப். 17: கடமலை-மயிலை ஒன்றியத்தில் ரேக்ளா ரேஸில் கலந்து கொள்ளும், மாடுகளுக்கு தீவிர பயிற்சி அளித்து வருகின்றனர்.
கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு, வாலிப்பாறை, தும்மக்குண்டு, பாலூத்து, சிங்கராஜபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ரேக்ளா ரேஸ் மாடுகளுக்கு தினசரி காலை, மாலை வேளைகளில் ஓட்டப்பயிற்சி அளித்து வருகின்றனர். இது குறித்து ரேக்ளா ரேஸ் மாடுகளுக்கு பயிற்சி அளிக்கும் ஒருவர் கூறுகையில்,

‘கடமலை-மயிலை ஒன்றியத்தில் சித்திரை திருவிழா மற்றும் பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் ரேக்ளா ரேஸ் நடக்கும். இதையொட்டி மாடுகளுக்கு பயிற்சி அளித்து வருகிறோம். மதிய வேளையில் நீச்சல் பயிற்சி அளிக்கிறோம். காலை, மாலையில் மாடுகளுக்கு பிண்ணாக்கு, பருத்திப்பால், மூலிகைபால் பேரிச்சம்பழம், வடிகஞ்சி, வாழைப்பழம், சத்துணவு மாவு ஆகியவற்றை வழங்கி வருகிறோம். மேலும், மாடுகளுக்கு தீவிரப் பயிற்சி அளித்து வருகிறோம்.

Tags :
× RELATED 10-ம் வகுப்பு மாணவர்கள் யூடியூப்,...