×

திருப்புத்தூர் அருகே மினி மாரத்தான் ஓட்டம்

திருப்புத்தூர், பிப்.17: திருப்புத்தூர் தாலுகா கண்டரமாணிக்கம் ஊராட்சி சார்பில் “தூய்மை கிராமம்-முன்மாதிரி கிராமம்” வலியுறுத்தி முதலாம் ஆண்டு மாபெரும் மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியை கண்டரமாணிக்கத்தை சேர்ந்த அகில இந்திய கால்பந்தாட்ட வீரர் ராமன்விஜயன், சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் மற்றும் கண்டரமாணிக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் ராமு கனகு கருப்பையா ஆகியோர் முன்னிலை வகித்து கொடியசைத்து போட்டியை துவக்கி வைத்தனர்.

குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என அனைத்து வயதினரும் கலந்து கொண்டனர். இலவச அனுமதியுடன் அனைத்து போட்டியாளர்களுக்கும் மாரத்தான் சான்றிதழ் மற்றும் பனியன்  வழங்கப்பட்டது.  போட்டியில் பங்குகொண்டோர் மற்றும் பார்வையாளர்கள் அனைவருக்கும் உணவு மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது. ஓட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசு, மெடல் விருதுகள் வழங்கப்பட்டது.

Tags : Thiruputhur ,
× RELATED திருப்புத்தூர் அருகே 96 குவார்ட்டர் பாட்டில் பறிமுதல்