×

கவிதை பயிலரங்கம்

தேவகோட்டை, பிப்.17: தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் மாநில அளவிலான கவிதை பயிலரங்கம் நடைபெற்றது. கல்லூரி துணைத்தலைவர் சேவுகன் தலைமையேற்றார். கல்லூரி செயலார் சாந்தி ஆச்சி முன்னிலை வகித்தார். முனைவர் கண்ணதாசன் வரவேற்றார்.
காலையில் நடைபெற்ற முதல் அமர்வில் மரபுக்கவிதை குறித்து திரைப்பட பாடலாசிரியர் தனிக்கொடி, இரண்டாம் அமர்வில் கவிஞர் ஸ்டாலின் சரவணன் ஆகியோர் மாணவர்களுக்கு  கவிதைப்பயிற்சி அளித்தனர்.

மாலையில் நடைபெற்ற விழாவில் கவிஞர் முத்து நிலவன் சான்றிதழ் வழங்கிப் பேசினார். முனைவர் மாரிமுத்து நன்றி கூறினார். முனைவர் கண்மணி, முனைவர் முருகன் உள்ளிட்ட பயிலரங்க நெறியாளர் குழுவினர், பயிலரங்க குழுவினர், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் தமிழ்த்துறையின் சார்பில் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

Tags : Poetry Workshop ,
× RELATED கவிதை பயிலரங்கம்