×

காளையார்கோவிலில் தேசம் காப்போம் பேரணி ஆலோசனை கூட்டம்

காளையார்கோவில், பிப்.17:  காளையார்கோவில் ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேசம் காப்போம் பேரணி குறித்து சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. காளையார்கோவில் ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று தனியார் திருமண மண்டபத்தில் சிறப்புக்கூட்டம் நடத்தினர். கூட்டத்திற்கு வடக்கு ஒன்றியச் செயலாளர் தொத்தப்பாண்டி தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றியச் செயலாளர் காளிதாஸ் முன்னிலை வகித்தார்.
 மாவட்ட துணைத் செயலாளர் சுடர்மணி, பாராளுமன்ற துணைச் செயலாளர் விசிக சங்கையா, மாவட்ட செய்திபிரிவு ஜான்சன் ஆகியார் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், பாஜக அரசின் குடியுரிமை திருத்தச் சட்டமும் (சிஏஏ), என்.பி.ஆர், என்.ஆர்.சி நடவடிக்கைகளும் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல அனைத்துத் தரப்பு மக்களுக்குமே ஆபத்தானவை. குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் தரும்பப்பெற வேண்டும், 2020 ஏப்ரலில் துவங்கவுள்ள தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்) நடவடிக்கையை உடனடியாக கைவிடவேண்டும், தேசிய குடியுரிமை பதிவேடு (என்.ஆர்.சி) திட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்ந்து வருகின்ற 22ம் தேதி திருச்சியில் நடைபெற உள்ள தேசம் காப்போம்  பேரணியில் கலந்த கொள்வது குறித்து பேசப்பட்டது. கூட்டத்தில் தாமோதரன், மச்சக்காளை, தனசேகரன், குவைத் ரவி வளவன், நாட்டரசன்கோட்டை பேரூராட்சி செயலாளர் முத்து, ஆறுமுகம், ஒன்றிய பொறுப்பாளர்கள் கருப்பையா, நவீன்குமார் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள்.

Tags : Nation Archive Rally Consultative Meeting ,Kaliyarikovil ,
× RELATED காளையார்கோவிலில் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பை கிராம மக்களே அகற்றினர்