×

தொழுநோய் விழிப்புணர்வு பிரச்சாரம்

தேவகோட்டை, பிப்.17:  தேவகோட்டை அரசு மருத்துவமனை முன்பாக தலைமை டாக்டர் ராமு தலைமையில் தொழுநோய் விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கியது. பொதுமக்களும், மருத்துவமனை பணியாளர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தலைமைச் செவிலியர் சிவபாக்கியம், தலைமை மருந்தாளுநர் பசவலிங்கம் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர். மேற்பார்வையாளர் வெங்கடசுப்பிரமணியன் ஒருங்கிணைத்தார். தோல்நோய் சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் நகரின் முக்கிய பகுதிகளான ஜீவாநகர், கைலாசநாதபுரம் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று தொழுநோய் கண்டுபிடிக்கும் பணி நடைபெற்றது. மாவட்ட நலக் கல்வியாளர் திருப்பதிராஜ் பணிகளை பார்வையிட்டார். தேவகோட்டை நகராட்சி அலுவலகம் முன்பாக துண்டுப்பிரசுரம் வழங்கினர். மேற்பார்வையாளர்கள் சந்திரசேகரன், சுகாதார ஆய்வாளர்கள் முத்துராமலிங்கம், ஜெபமாலைமேரி, நகராட்சி சுகாதார ஆய்வாளர் ராஜமாணிக்கம் பங்கேற்றனர்.

Tags : Leprosy Awareness Campaign ,
× RELATED பெரம்பலூரில் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி