×

சிங்கம்புணிரியில் இருளில் மூழ்கியது சிறுவர் பூங்கா நடைபயிற்சி செய்யும் மக்கள் அவதி

சிங்கம்புணரி,  பிப்.17:  போதிய பராமரிப்பு இல்லாததால் சிங்கம்புணரியில் உள்ள சிறுவர் பூங்காவில் மின்விளக்குகள் எரியாமல் இருட்டாக கிடக்கின்றது. சிங்கம்புணரி மேலூர் சாலையில் சிறுவர் பூங்கா உள்ளது. விளையாட்டு உபகரணங்கள், மின் விளக்குகள் என ஜொலித்த இப்பூங்கா கடந்த சில ஆண்டுகளாக உரிய பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்து வருகிறது. குறிப்பாக விளையாட்டு உபகரணங்கள் உடைந்து இருந்த இடம் தெரியாத நிலை உள்ளது. இதனால் விடுமுறை நாட்களில் மாணவர்கள் விளையாட்டு உபகரணங்கள் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

மேலும் இப்பூங்காவில் தினமும் காலை மாலை நேரங்களில் பெண்கள், முதியோர்கள் என ஏராளமானோர் நடைபயிற்சி செய்து வருகின்றனர். பூங்காவில் மின் விளக்குகள் பராமரிப்பு இல்லாததால் இருட்டாக கிடக்கிறது. இதனால் நடைபயிற்சி செய்யும் பொதுமக்கள் அச்சத்துடன் வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து மின் விளக்குகளையும் விளையாட்டு உபகரணங்களையும் சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Singampuniri ,park ,
× RELATED The Eyes of Darkness, End of Days...40 வருடத்திற்கு முன்பே...