×

சென்னையில் இஸ்லாமியர் மீது தாக்குதல் தமுமுக கடும் கண்டனம்

தொண்டி, பிப்.16: மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட சட்டத்தை எதிர்த்தும் திரும்ப பெற வலியுறுத்தியும் நாடு முழுவதும் பல போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. நேற்று சென்னை வண்ணார்பேட்டை பகுதியில் தமிழகத்தில் இச்சட்டத்தை அமுல்படுத்த கூடாது என கூறி முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்தில் இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். ஒரு கட்டத்தில் போலீசார் இக்கூட்டத்தின் மீது தடியடி நடத்தினர். இதனால் ஏராளமான பெண்கள் காயம் அடைந்தனர். போலிசரின் இந்த தாக்குதலை வண்மையாக கண்டிப்பதோடூ தாக்குதலில் ஈடுபட்ட போலீசாருக்கு துறை ரீதியான தண்டனை வழங்க வேண்டும் என தமுமுக கோரிக்கை விடுததுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் மாநில செயலாளர் சாதிக் பாட்சா கூறியது,

சிஏஏ, என்ஆர்சி மற்றும் என்பிஆருக்கு எதிராக டெல்லி உட்பட நாடு முழுவதும் அமைதி போராட்டம் நடைபெற்று வருகிறது. இதே போல் நேற்று முன்தினம் சென்னை வண்ணார் பேட்டை பகுதியில் பெண்கள் உட்பட இயக்கத்தினர் அமைதி போராட்டம் நடத்தினர் அவர்கள் மீது காவல்துறையினர் கொடுர தாக்ககுதல் நடத்தியுள்ளனர். இதில் பல பெண்கள் காயம் அடைந்துள்ளனர். இதை கேள்வி பட்டு அங்கு சென்ற தலைவர்களும் கைது செய்யப்பட்டு தாக்கப்பட்டு ள்ளனர். இஸ்லாமியர்கள் குறி வைத்து தாக்கும் காவல்துறையை வண்மையாக கண்டிக்கிறோம். தடியடியில் இறங்கிய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், கைது செய்யப்பட்டுள்ள தலைவர்கள் உட்பட அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்றும் தொடர் போடாராட்டம் நடத்த அரசு அனுமதிக் வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

ஜமாஅத் கண்டனம்
ராமநாதபுரம் மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் வெளியிட்ட அறிக்கையில், ‘‘சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடிய மக்கள் மீது காவல்துறை நடத்திய தடியடி மிகவும் கண்டிக்கத்தக்கது. மக்களின் போராட்டங்களை திசை திருப்பும் வகையில் திட்டமிட்டு ஒரு சிலர் செய்கின்ற சதிக்கு தமிழக அரசும், காவல்துறையும் துணை போகக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Islamists ,Chennai ,attack ,
× RELATED ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு...