×

கிரிக்கெட் சங்க பரிசளிப்பு விழா

காரைக்குடி, பிப்.17: சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் 2018, 2019க்கான மாவட்ட அளவிலான கிரிக்கெட் அணிகளுக்கான பரிசளிப்பு விழா காரைக்குடியில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக ஐபிஎல் அணியின் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் சிஇஓ விஸ்வநாதன் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். ‘ஏ’ பிரிவில் தேவகோட்டை கிரிக்கெட் கிளப் அணியினர் முதல் பரிசையும், இரண்டாம் பரிசை காரைக்குடி லத்தீப் மெம்மோரியல் அணியினரும் பெற்றனர். ‘பி’ பிரிவில் புதுவயல் நியூ லேண்ட் கிரிக்கெட் கிளப் அணியினர் முதல் பரிசையும், இரண்டாம் பரிசை அருண்குமார் கிரிக்கெட் கிளப் அணியினரும் பெற்றனர்.

‘சி’ பிரிவில் ஸ்மேசர்ஸ் கிரிக்கெட் கிளப் அணியினர் முதல் பரிசையும், இரண்டாமிடத்தை ஸ்டார்பேர்ட்ஸ் கிரிக்கெட் கிளப் அணியினரும் வென்றனர். சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் கேரளா ரஞ்சி அணியின் விளையாட்டு வீரர் குமரன் நாயர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் கழக செயலாளரும் கேவை லைக்கா அணியின் சிஇஓ.வுமான சிவக்குமார் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினர். விழா ஏற்பாடுகளை சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தினர் செய்திருந்தனர்.

Tags : Cricket Association Award Ceremony ,
× RELATED கிரிக்கெட் சங்க பரிசளிப்பு விழா