×

ரெட்கிராஸ் சார்பில் டூவீலர் விழிப்புணர்வு பேரணி கலெக்டர் துவக்கி வைத்தார்

ராமநாதபுரம், பிப்.17: ராமநாதபுரம் ஸ்வார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியில் ரெட் கிராஸ் சார்பாக நடத்தப்பட்ட இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் வீரராகவ ராவ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்தியன் ரெட்கிராஸ் சொஸைட்டி மனித நேய சேவைகள் செய்து வரும் ஒரு அமைப்பு. 1920ம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்ட இவ்வமைப்பின் நூற்றாண்டு விழா தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியன் ரெட் கிராஸ் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு கடந்த 6ம் தேதி இருசக்கர மோட்டார் வாகன தொடர் பேரணி தொடங்கியது. இப்பேரணியானது ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த கலெக்டரால் துவக்கி வைக்கப்பட்டது. தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு சென்று வந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியில் இப்பேரணி கலெக்டரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பேரணியில் ரெட் கிராஸ் கொள்கைகளையும் செயல்பாடுகளையும் விவரிக்கும் வாகனம் (ரதம்) ஒன்றும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் செல்லவுள்ளது. இத்தொடர் பேரணியானது சென்னைக்கு சென்று முடிவடைகிறது. பேரணியில், மாநில ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் எம்.ராக்லாண்ட் மதுரம், துணைத் தலைவர் அஸ்மாபாக் அன்வர்தீன், சேர்மன் ஹாரூன், பொருளாளர் குணசேகரன் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Twoweiler Awareness Rally Collector ,Red Cross ,
× RELATED தென்காசியில் சுகாதார விழிப்புணர்வு கூட்டம்