மணல் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தவருக்கு வெட்டு

திருமங்கலம், பிப்.17: திருமங்கலம் அருகே மணல் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தவரை அரிவாளால் வெட்டிய 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர். மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள கள்ளிக்குடி சென்னம்பட்டியை சேர்ந்தவர் குருசாமி(45). இதே பகுதியை சேர்ந்த அருண்குமார் அந்த பகுதியில் மணல் அள்ளுவதாக போலீசாருக்கு குருசாமி தகவல் கொடுத்துள்ளார்.

Advertising
Advertising

இதனால் ஆத்திரமடைந்த அருண்குமார், அவரது நண்பர்கள் பாண்டி, மாரி, சங்கிலி போஸ் உள்ளிட்டோர் அரிவாள் மற்றும் கம்பால் குருசாமியை தாக்கியுள்ளனர். காயமடைந்த குருசாமி விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிந்து பாண்டியை கைது செய்து மற்றவர்களை தேடி வருகின்றனர். 7 பேர் மீது வழக்கு Postal Regn No. MA /03/2018 - 2020

Related Stories: