×

கன்றுக்குட்டி பலி; விவசாயிகள் மறியல் சோழவந்தான் அருகே கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 5 பேர் கைது

சோழவந்தான், பிப்.17: சோழவந்தான் அருகே கொள்ளையடிக்க சதித் திட்டம் தீட்டிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே கச்சிராயிருப்பு பகுதியில் சோழவந்தான் இன்ஸ்பெக்டர் பாலாஜி, காடுபட்டி எஸ்.ஐ.ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு கும்பலாக இருந்த சந்தேகத்திற்கிடமான ஐந்து நபர்களை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், அவர்கள் மதுரை மேலமடை சையது இப்ராஹிம் (22), பீபிகுளம் நியாஸ்(22), செல்லூர் தட்சிணாமூர்த்தி (21), மணிநகரம் அரவிந்தன்(24) மற்றும் கச்சிராயிருப்பு பிரவீன்(21) ஆகியோர் என தெரியவந்தது.

மேலும் மதுரையில் ஒன்றாக படித்த நண்பர்களான இவர்கள் வேலைக்கு செல்லாமல் சுற்றித் திரிந்துள்ளனர். இதனால் இப்பகுதியில் கொள்ளை மற்றும் வழிப்பறி செய்வதற்காக ஒன்று கூடி திட்டமிட்ட போது தான் போலீசிடம் சிக்கியுள்ளனர். இதையடுத்து 5 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED கால்வாயில் விழுந்த பசு, கன்று மீட்பு