மதுரை நகருக்கு புதிய டவுன் பஸ்கள் தினக்கூலி அடிப்படையில் சம்பளம் வழங்க வேண்டும்

மதுரை, பிப். 17: தினக்கூலி அடிப்படையில், ஊதியம் வழங்கக்கோரி, உழவர் சந்தை பணியாளர்கள் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர். தமிழகத்தில் கடந்த 1999ல் முதன்முறையாக மதுரை அண்ணாநகரில் உழவர் சந்தை துவக்கப்பட்டது. தற்போது தமிழகம் முழுவதும் 179 உழவர் சந்தைகள் இயங்கி வருகிறது. இந்த சந்தையை பராமரிக்க தலா 3 செக்யூரிட்டிகள், ஒரு துப்புரவு பணியாளர் என 4 பேர் வீதம் 716 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் இவர்கள் பணியாற்றுகின்றனர்.

Advertising
Advertising

தங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஊதியம் வழங்குவதை மாற்றி, கலெக்டரின் தினக்கூலி அடிப்படையில், வேளாண் விற்பனை குழு செயலாளர் மூலமாக நேரடியாக ஊதியத்தை வழங்க வேண்டும் எனக்கோரி, தமிழ்நாடு உழவர் சந்தை பணியாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் நெடுஞ்செழியன், தலைவர் பக்கிரிச்சாமி, பொருளாளர் திராவிடமாரி உள்ளிட்ட நிர்வாகிகள் வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு, வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் செயலர் ககன்தீப்சிங் பேடியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

Related Stories: