திருப்பரங்குன்றத்தில் காவல்துறையினருக்கு மருத்துவ முகாம்

திருப்பரங்குன்றம், பிப்.17: திருப்பரங்குன்றத்தில் காவல்துறையினருக்கான மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான காவல்துறையினர் குடும்பத்துடன் பங்கேற்றனர். மதுரை மாநகர் காவல்துறை மற்றும் மதுரை சரவணா மருத்துவமனை சார்பில் காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நேற்று திருப்பரங்குன்றம் சன்னதி தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

Advertising
Advertising

முகாமை திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற எல்எல்ஏ., டாக்டர். சரவணன் துவக்கி வைத்தார். இந்த முகாமில் கண், பல், நுரையீரல், பொது மருத்துவம் என்று பலதரப்பட்ட சிகிச்சைகளும், ரத்த பரிசோதனை, இசிஜி, எக்கோ போன்ற பரிசோதனைகளும் அளிக்கப்பட்டது. இதில் திருப்பரங்குன்றம் இன்ஸ்பெக்டர் மதனகலா உள்ளிட்ட ஏராளமான காவல்துறையினர் குடும்பத்துடன் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

Related Stories: