வெயிலில் பயணிகள் பரிதவிப்பு திருமங்கலம் அருகே நடந்த டூவீலர் விபத்துகளில் இருவர் பலி

திருமங்கலம், பிப்.17: திருமங்கலம் அருகே நின்று கொண்டிருந்த லாரியின் மீது மோதி டூவீலரில் சென்ற வாலிபர் உயிரிழந்தார். திருமங்கலம் அருகேயுள்ள கரிசல்பட்டியை சேர்ந்தவர் அழகர்(40) கூலித்தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு இவர் டூவீலரில் கள்ளிக்குடியிலிருந்து ஊருக்கு சென்றார். மேலக்கோட்டை சர்வீஸ் ரோட்டில் சென்றபோது இருட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரியை கவனிக்காமல் சென்று படுவேகமாக மோதியுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே அழகர் உயிரிழந்தார். திருமங்கலம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

மற்றொரு சம்பவம் திருமங்கலம் அருகே டூவீலர் தடுப்புசுவரில் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார். திருமங்கலம் அடுத்துள்ள உச்சப்பட்டியை சேர்ந்தவர் பாண்டி. இவரது மகன் அதிவீரபாண்டி(36). இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மதுரையிலிருந்து உச்சப்பட்டிக்கு டூவீலரில் சென்றார். தோப்பூர் அருகே சென்ற போது எதிர்பாராவிதமாக தடுப்புசுவரில் மோதி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அதிவீரபாண்டி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: