மாநில தடகளப் போட்டிக்கு பழநி மாணவர்கள் தேர்வு

பழநி, பிப். 17 :திண்டுக்கல்லில் நடந்த மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற பழநி மாணவர் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் திண்டுக்கல்லில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் தடகளப் போட்டியில் 100 மீட்டர், 200 மீட்டர், 1500 மீட்டர், 10000 ஆயிரம் மீட்டர், நீளம் தாண்டுதல், வட்டெறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. 500க்கும் மேற்பட்ட மாணவ&மாணவிகள் கலந்து கொண்டனர்.

போட்டிகளில் கலந்து கொண்ட பழநி வேலன் விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் கருப்பையா தடகளப் போட்டியில் 10000 மீட்டர் ஓட்டத்தில் 2ம் இடம் பிடித்தார். குத்துச் சண்டை போட்டியில் மாணவர் சங்கர்ராமன் முதலிடம் பிடித்தார். மாணவர் கோகுல்ராஜன் 2ம் இடம் பிடித்தார்.

வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தலைவர் வெள்ளியங்கிரி, செயலாளர் பழனிவேலு, தாளாளர் கோபாலகிருஷ்ணன், முதல்வர் கதிரவன், துணை முதல்வர் நாச்சிமுத்து மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். போட்டியில் பங்கேற்ற பழநி அச்சீவர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மாணவர் ஹரிபிரசாத் கலந்து கொண்டு ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.

அடுத்த மாதம் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவர் ஹரிபிரசாத்தை பயிற்சியாளர் கார்த்திகேயன் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

Related Stories: