×

ஒட்டன்சத்திரத்தில் கஞ்சா விற்றவர் கைது

ஒட்டன்சத்திரம், பிப். 17:ஒட்டன்சத்திரம் பஸ் நிலையத்தில் கஞ்சா வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர். ஒட்டன்சத்திரம் பஸ் நிலையத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு வந்த தகவலின் பேரில், போலீசார் பஸ் நிலையத்தில் சோதனை செய்தனர். அப்போது சந்தேத்திற்கிடமான வகையில் நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர் விற்பனை செய்வதற்காக சுமார் 3 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. அவரை விசாரணை செய்ததில், அவர் கோவையைச் சேர்ந்த ராஜா மகன் ராகுல் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர்.ஒட்டன்சத்திரம் நகர் பகுதியில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பதாக கிடைத்த தகவலையடுத்து,

சோதனை செய்ததில், ஒட்டன்சத்திரம்-திருவள்ளுவர் சாலையில் பாலசுப்பிரமணியன் என்பவரது வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் வைத்திருந்தது தெரியவந்தது. சுமார் ரூ.1.50 மதிப்புள்ள புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பொருட்களை வைத்திருந்த பாலசுப்பிரமணி என்பவர் தலைமறைவாகிவிட்டார். பாலசுப்பிரமணியனை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED வீட்டில் கஞ்சா விற்றவர் கைது