×

ஒட்டன்சத்திரத்தில் ஊரக வேலைவாய்ப்பு திட்ட ஆலோசனை கூட்டம்

ஒட்டன்சத்திரம், பிப். 17: ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப்பணிகள் தேர்வு செய்தல் தொடர்பான கலந்தாலோசனை கூட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினர் அர.சக்கரபாணி, திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு பேசினர். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்ணன், மனோகரன் (கி.ஊ), ஒட்டன்சத்திரம் நகர செயலாளர் வெள்ளைச்சாமி,

ஒட்டன்சத்திரம்  ஒன்றிய செயலாளர்கள் ஜோதீஸ்வரன், தர்மராஜா, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சங்கீதா, ஒட்டன்சத்திரம் ஒன்றியக்குழு தலைவர் அய்யம்மாள், துணைத் தலைவர் காயத்திரிதேவி, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஒன்றிய அலுவலக பொறியாளர்கள், ஒன்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Employment Program Advisory Meeting ,
× RELATED சுற்றுலா வாகனங்களை திருப்பி அனுப்பும் போலீசார்