×

பட்டிவீரன்பட்டி அருகே பற்றி எரிந்த காட்டு தீ தீயணைப்பு துறையினர் போராடி அணைத்தனர்


பட்டிவீரன்பட்டி, பிப். 17: பட்டிவீரன்பட்டி அருகே திண்டுக்கல்-வத்தலக்குண்டு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நல்லாம்பிள்ளை கிராமத்தை ஒட்டிய பகுதிகளில் நேற்று மதியம் திடீரென பயங்கர காட்டு தீ பற்றி எரிந்தது. இந்த காட்டு தீ மளமளவென பற்றி எரிந்து பரவி சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் உள்ள பட்டா காடுகளில் பற்றியது. இது குறித்து வத்தலக்குண்டு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்க போராடினர். மேலும் இதனை கண்ட நல்லாம்பிள்ளை, அய்யம்பட்டி, சாலைப்புதூர் பகுதிளைச் சேர்ந்த பொதுமக்களும் தீயணைப்பு துறையினரிடம் இணைந்து ஊருக்குள் தீ பரவாமல் தடுத்து தீயை அணைத்தனர். சுமார் 4 மணி நேரம் எரிந்த காட்டு தீயில் தோட்டத்தின் வரப்புகளில் இருந்த வேம்பு மற்றும் பலஜாதி மரங்களும் எரிந்தன.

மேலும் அருகில் கிராம பகுதிகளிலிருந்து தண்ணீர் டிராக்டர்களும் வந்து தீயை அணைக்க வரவழைக்கப்பட்டன. விரைந்து தீ அணைக்கப்பட்டதால் கிராம பகுதிகளில் பரவாமல் தடுக்கப்பட்டது. சம்பவ இடத்தை பட்டிவீரன்பட்டி போலீசார் வந்த பார்வையிட்டு தீ பிடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் சித்தரேவு அருகேயுள்ள நெல்லூர்-சிங்காரக்கோட்டை ரோட்டில் சின்னச்சாமி என்பரின் தோட்டத்தில் 2 ஏக்கரில் நடப்பட்டு இருந்த மொச்சை செடிகள் தீயில் கருகின.

Tags : fire ,Pativeeranpatti ,
× RELATED திருவண்ணாமலை தீப மலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு