தமிழக பட்ஜெட்டில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஒன்றும் இல்லை

திண்டுக்கல், பிப். 17:தொமுச நிர்வாகி ராஜேந்திரகுமார் கூறியதாவது: தமிழக பட்ஜெட்டில் பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்துவதற்கு ரூ,70 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் மின்சாரப் பேருந்து வாங்குவதற்கு ரூ.800 கோடி என அறிவிப்பு வெளியடப்பட்டுள்ளது. கடந்த வருடம் நாகப்பட்டினம் அருகில் ஓய்வரை இடிந்து விழுந்து போக்குவரத்து தொழிலாளர்கள் மரணமடைந்தனர். அதன் பிறகு தமிழகம் முழுவதும் போக்குவரதது கழக பணிமனைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இன்றளவும் பழுதடைந்த கட்டிடங்கள் சீர் செய்யப்படவில்லை.

மேலும் பணிமனைகளிலுள்ள கழிப்பறைகள் போதுமானதாகவும், சுகாதாரமாகவும் இல்லை. உதாரணமாக 400 தொழிலாளர்கள் பணிபுரிகின்ற பணிமனைகளில் 4 கழிப்பறைகள் மட்டுமே உள்ளது. தொழிற்சங்கங்கள் தொடர்ந்து நிர்வாகங்களிடம் கோரிக்கை வைத்தும் கழிப்பிட பிரச்னை சரி செய்யப்படாதது தொழிலாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது’ என்றார்.

Related Stories: