×

சேலம் பகுதிகளில் சாமந்தி விளைச்சல் அமோகம்

சேலம், பிப்.17:சேலம் கன்னங்குறிச்சி தாமரை நகரில், மஞ்சள்  சாமந்தி பூக்கள் பூத்து குலுங்குவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.சேலம் சுற்றுவட்டார பகுதிகளில் பல வகை பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. குறிப்பாக மஞ்சள், வெள்ளை சாமந்தி பூக்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு பறிக்கப்படும் பூக்கள் சேலம் வ.உ.சி., பூ மார்க்கெட், சென்னை, பெங்களூரு பூ மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். தற்போது மஞ்சள், வெள்ளை சாமந்தி நல்லமுறையில் பூத்துள்ளன. இதனை விவசாயிகள் தினசரி பறித்து விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.

Tags : Salem ,areas ,
× RELATED சேலம் மாவட்டத்தில் அனைத்து குறைதீர் கூட்டமும் ரத்து