×

வாழப்பாடியில் குடிசை வீடு தீயில் எரிந்து நாசம்

வாழப்பாடி,பிப்.17: வாழப்பாடி பேரூராட்சி செல்லப்பா நகரில் வசித்து வருபவர் சுதா (45). அரசு பள்ளியில் சத்துணவு சமையலராக வேலை பார்த்து வருகிறார். இவரது கணவர் 20 ஆண்டுக்கு முன் இறந்து விட்டார். இந்நிலையில், நேற்று இவரது குடிசை வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது. இது குறித்த தகவலின் பேரில், வாழப்பாடி தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த விபத்தில் குடிசை முழுவதும் எரிந்து டிவி, பிரிட்ஜ், கிரைண்டர், பீரோ, ஷோபா, மிக்சி, நெல் என அனைத்தும் நாசமானது.
இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED ஈரோடு: வீரப்பன்சத்திரம் அய்யன்காடில் ஜவுளி கிடங்கில் பயங்கர தீ விபத்து