×

கொங்கணாபுரம் சங்கத்தில் 13 ஆயிரம் மூட்டை பருத்தி ₹3.10 கோடிக்கு விற்பனை

இடைப்பாடி, பிப்.17:கொங்கணாபுரம் திருச்செங்கோடு வேளாண் கூட்டுறவு சங்கத்தில், 13 ஆயிரம் மூட்டை பருத்தி ₹3.10 கோடிக்கு விற்பனையானது.
சேலம் மாவட்டம்,இடைப்பாடி அருகே கொங்கணாபுரம் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், பருத்தி ஏலம் நடந்தது. இந்த ஏலத்தில் சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான விவசாயிகள் 13 ஆயிரம் மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஏலத்தில் டிசிஎச் ரகம் குவிண்டால் ₹6850 முதல் 7799 வரையும், பிடி ரகம் ₹5059 முதல் 5959 வரை ஏலம் போனது. நேற்று பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 13 ஆயிரம் மூட்டை பருத்தி ₹3.10 கோடிக்கு விற்பனையானது. மேலும் நேற்று முன்தினம் நடந்த பருத்தி ஏலத்தில் கொண்டு வரப்பட்ட 5100 மூட்டை பருத்தி 1.20 கோடிக்கு விற்பனையானது.
இதில் ெமாத்தம் 2 நாட்களில் மட்டும் 5100 மற்றும் 13 ஆயிரம் மூட்டை பருத்தி என ₹4.30 கோடிக்கு மொத்தமாக விற்பனையானதாக வியாபாரிகள் தரப்பில் கூறப்பட்டது.  


Tags : Konganapuram Sangam ,
× RELATED வலங்கைமான் அடுத்த தொழுவூரில் நெல் மூட்டைகளுடன் லாரி கவிழ்ந்தது