×

மொரப்பூரில் நிதிசார் கல்வி விழிப்புணர்வு முகாம்

அரூர், பிப்.17: போளையம்பள்ளியில் நபார்டு வங்கி சார்பில் நிதிசார் கல்வி விழிப்புணர்வு முகாம் நடந்தது.
தமிழ்நாடு கிராம வங்கி  மற்றும் நபார்டு வங்கி இணைந்து நிதிசார் கல்வி விழிப்புணர்வு முகாம், மொரப்பூர் அருகே போளையம்பள்ளியில்  நடத்தியது. இதற்கு இந்தியன் வங்கியின் முன்னோடி மேலாளர் கண்ணன் தலைமை வகித்தார். இதில் நிதிசார் கல்வி ஆலோசனை குழு உறுப்பினர் எழில்மணி, ஊராட்சி மன்ற தலைவர் கலைமணி மாயகண்ணன், விப்ரோ தொண்டு நிறுவன இயக்குநர் வெங்கடேசன், அமுதா, திலகவதி, ரகு, நிறைமதி, சகுந்தலா, தேன்மொழி, லதா, ரேவதி உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் பாரதி கலை குழுவின் தப்பாட்ட  நிகழ்ச்சி நடந்தது.

Tags : Financial Education Awareness Camp ,
× RELATED மொரப்பூர் ரயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும்