×

டேங்க் ஆப்ரேட்டர்கள் ஆலோசனை கூட்டம்

தர்மபுரி, பிப்.17: மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குபவர்கள், துப்புரவு பணியாளர், தூய்மை காவலர்கள் சங்கம் சார்பில் நேற்று தர்மபுரியில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
தர்மபுரி பெரியார் மன்றத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட நிர்வாகி ராமசந்திரன் தலைமை வகித்தார். மாநில தலைவர் கிருஷ்ணன், ஊராட்சி செயலாளர்கள் சங்க மேற்கு மண்டல தலைவர் செல்வம், மாநில துணை தலைவர் திருவருட்செல்வன் ஆகியோர் பேசினர். இதில், டேங்க் ஆப்ரேட்டர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களை பணி நிரந்தப்படுத்தி, அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு சம்பளத்தை கருவூலம் மூலம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், ஒன்றிய தலைவர் பிரகாஷ், பாலக்கோடு பொறுப்பாளர் சிவன், ராமசந்திரன், மாதம்மாள், கனகா, கோவிந்தம்மாள், மாது, ராஜா, சித்ரா, ரூபாவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Tank Operators Advisory Meeting ,
× RELATED காரிமங்கலத்தில் டேங்க் ஆபரேட்டர்கள் ஆலோசனைக் கூட்டம்