×

பெட்ரோல் பங்க்கில் தகராறு ரயில்வே கேட்மேன் கைது

தர்மபுரி, பிப்.17: மதுபோதையில் பெட்ரோல் பங்க்கில் தகராறில் ஈடுபட்ட கேட்மேனை போலீசார் கைது செய்தனர். தர்மபுரி  ரயில்வே குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் கதிர் (43). இவர் ரயில்வே  கேட்மேனாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம், அதே  பகுதியில் எஸ்வி ரோட்டில் செயல்பட்டு வரும் பெட்ரோல்  பங்கிற்கு சென்ற  கதிர், தனது டூவீலருக்கு பெட்ரோல் அடித்தார். அப்போது அங்கிருந்த   ஊழியர்களிடம் கதிர் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து  தகவல்  அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தர்மபுரி டவுன் எஸ்ஐ சுந்தரமூர்த்தி,  கதிரிடம் விசாரணை  நடத்தினார். அதில், அவர் மதுபோதையில் இருப்பது  தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவரை  கைது செய்தனர்.

Tags : Catman ,
× RELATED பெட்ரோல் போடுவதில் தகராறு:...