×

அரூர் மக்கள் நீதிமன்றத்தில் 24வழக்குகளுக்கு தீர்வு

அரூர், பிப்.17: அரூர் வட்ட சட்ட பணிகள் குழு மற்றும் இந்தியன் வங்கி இணைந்து, சட்ட பணிகள் குழு கட்டிடத்தில் மக்கள் நீதிமன்றத்தை நடத்தியது. ஓய்வு பெற்ற நீதிபதி ராஜாராம் தலைமையில் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. வங்கி வாராக்கடன் சார்பாக, 657 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. அதில், 24 வழக்குகளில் ₹16 லட்சத்து 64 ஆயிரத்திற்கு சமரச தீர்வு காணப்பட்டது. இதில் வட்ட சட்ட பணிகள் குழு நிர்வாக அதிகாரி விஜயகுமார், வழக்கறிஞர்கள் ராமமூர்த்தி, சிற்றரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

புலம் பெயரும் தொழிலாளர்களுக்கு பயிற்சி
தர்மபுரி, பிப்.17: தர்மபுரி மாவட்டம் நல்லானூர் ஜெயம் பொறியியல் கல்லூரியில், அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்களின் நல ஆணையத்தின் சார்பில், புலம்பெயரும் தொழிலாளர்களின் முன்னேற்பாடுகள் குறித்த பயிற்சி கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு கல்லூரியின் இயக்குநர் மனோஜ் மௌரியா தலைமை வகித்தார். பயிற்சி கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக பென்னாகரம் தாசில்தார் சரவணன் மற்றும் பேபி கீதாஞ்சலி ஆகியோர் கலந்துகொண்டு புலம்பெயரும் தொழிலாளர்களின் பயண முன்னேற்பாடுகள் குறித்து விவரித்துப் பேசினார். இதில், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.Tags : Aroor People's Court ,
× RELATED அவசர வழக்குகள் மட்டுமே காணொலி காட்சி...