×

தர்மபுரியில் மரங்களில் புளி உலுப்பும் பணி

தர்மபுரி, பிப்.17: தர்மபுரி மாவட்டத்தில் மரங்களில் புளி உலுப்பும் பணி துவங்கியது.
தர்மபுரி மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் தனியார் நிலங்களில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் புளிய மரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் புளிப்படுத்தும் தொழில் கைத்தொழிலாக நடந்து வருகிறது. புளியம் பழத்தின் மேல் தோலை நீக்குதல், கொட்டையை நீக்குதல், சுத்தப்படுத்தி புளியம் பழத்தை தோசைப்புளி ஆக்குதல் போன்ற பணியில் பெண்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஈடுபடுகின்றனர். புளிப்பதப்படுத்தும் பணி மதிகோன்பாளையம், பாப்பாரப்பட்டி, இண்டூர், பென்னாகரம் பகுதிகளில் பரவலாக நடந்து வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் புளி சீசன்
முடிந்தவுடன், இம்மாவட்ட புளி வியாபாரிகள் பீகார், மத்திய பிரதேசம், ஆந்திரா பிரதேசம், சட்டீஸ்கர், உத்ராஞ்சல், குஜராத், கர்நாடகா போன்ற மாநிலங்களில் விளையும், புளிகளை கொள்முதல் செய்து, தர்மபுரிக்கு கொண்டு வருகின்றனர். அவற்றை பதப்படுத்தி, பாண்டிச்சேரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்புகின்றனர்.
தமிழகத்தின் புளி தேவையில் 75 சதவீதம் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்தாண்டில் பருவமழை போதிய அளவிற்கு பெய்துள்ளதால் நடப்பாண்டில் புளி காய்ப்பு அதிகரித்துள்ளது.
இதையடுத்து நேற்று எஸ்வி ரோடு பகுதியில் உள்ள புளியமரங்களில் புளி உலுப்பும் பணி தொங்கியுள்ளது.

Tags : Dharmapuri ,
× RELATED தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில்...