×

நத்தமேடு அரசு பள்ளியில் குடிநீர் தட்டுப்பாட்டால் மாணவர்கள் அவதி

கடத்தூர், பிப்.17: கடத்தூர் அருகே அரசு தொடக்கப்பள்ளியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
கடத்தூர் அருகே நத்தமேடு அரசு தொடக்கப்பள்ளியில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். ஒரு தலைமையை ஆசிரியர், 4 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். மாணவர்களின் பயன்பாட்டிற்காக பள்ளி வளாகத்தில், குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. இந்நிலையில் குடிநீர் தொட்டிக்கான போர்வெல் பழுதடைந்தது. பின்னர் பயன்பாடின்றி இருந்த சின்டெக் ேடங்க் மாயமானது. இதனால், தண்ணீர்
வசதியின்றி மாணவர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, பள்ளியில் போதுமான குடிநீர் வசதி ஏற்படுத்த ேவண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Nattamadu Government School ,
× RELATED குழாய் உடைந்து சாலையில் ஆறாக ஓடும் காவிரி குடிநீர்