×

புரட்சிகர சோஷலிஸ்ட் ஆலோசனை கூட்டம்

தர்மபுரி, பிப்.17:தர்மபுரி மாவட்ட புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி சார்பில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், நேற்று தர்மபுரி பெரியார் மன்றத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் புகழேந்தி தலைமை வகித்தார்.
இதில் மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை கைவிட வேண்டும். தர்மபுரியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில், நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற 500 பேர் மீது போடப்பட்ட வழக்கு ஜனநாயகத்திற்கு எதிரான வழக்கை ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் தேர்வுகளில், முறைகேட்டில் ஈடுபட்டுள்ள அனைவரும் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி ஆற்றின் உபரி நீரை தர்மபுரி மாவட்ட ஏரி குளங்களில் நிரப்பும் திட்டத்தை தமிழக அரசு இந்த பட்ஜெட் கூட்ட தொடரில் அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், பார்த்திபன், வடிவேல், கோவிந்தசாமி, மேகநாதன், சக்திசேல், மாதேஷ், காசி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Socialist Advisory Conference ,
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா