×

சாகுபடி செலவு குறைவு; வருமானம் இருமடங்கு புளியஞ்சோலை விவசாயிக்கு வேளாண் விருது

திருச்சி, பிப். 16: வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் இயந்திரங்களை பயன்படுத்தி சாகுபடி செலவை குறைத்து வருமானத்தை இரண்டு மடங்காக்கிய புளியஞ்சோலை விவசாயிக்கு முன்னோடி வேளாண் விருது வழங்கப்பட்டது.
கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேளாண் இயந்திரங்களுக்கான செயல்விளக்க விழா நடந்தது. இதில் பண்ணை இயந்திரங்கள் சிறப்பாக பயன்படுத்தியதற்தாக திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் புளியஞ்சோலையை சேர்ந்த விவசாயி இளங்கோவனுக்கு வேளாண் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை வேளாண் பல்கலை துணைவேந்தர் குமார், வேளாண் விரிவாக்க இயக்குநர் ஜவஹர்லால் ஆகியோர் வழங்கினர்.
நிலக்கடலை, மரவள்ளி கிழங்கு, சின்ன வெங்காயம் ஆகியவற்றில் பண்ணை இயந்திரங்களில் விதை விதைக்கும் கருவி முதல் அறுவடை வரை இயந்திரங்களை பயன்படுத்தினார். இவற்றில் விவசாயத்தில் சுழல் கலப்பை, சட்டி கலப்பை, நிலம் சமப்படுத்தும் கருவிகள், இரண்டுவகை சேர்ந்த கோனோவீடர்களை எடுக்கும் கருவிகள், சொட்டுநீர் பாசனம், தெளிப்புநீர் பாசனம், சொட்டுநீர் பாசனத்தின் மூலம் உரம் கொடுத்தல், தௌப்புநீர் பாசனத்தின் மூலம் உரம், பூச்சி கொல்லிகள் மற்றும் பூஞ்சானக்கும் கருவி, அறுவை இயந்திரங்களை கொண்டு அறுவடை செய்தல் ஆகியவையை மேற்கொண்டார். இப்படி வேளாண் இயந்திரங்களை பயன்படுத்தி சாகுபடி செலவை குறைத்து வருமானத்தை இரு மடங்காக்கியதால் இவருக்கு வேளாண் விருது வழங்கப்பட்டது.

Tags : tamarind farmer ,
× RELATED குறுவை சாகுபடி பொய்த்து போனதால் சோளம் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்