×

தா.பேட்டையில் சார் பதிவாளரை மிரட்டியவர் கைது

தா. பேட்டை, பிப்.17: தா.பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளராக பணிபுரிந்து வருபவர் கோகிலா(42). இந்நிலையில் நேற்று முன்தினம் நாமக்கல் மாவட்டம், வரகூர் பகுதியை சேர்ந்த மூர்த்தி(35) என்பவர் தா.பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு வேலை செய்துகொண்டிருந்த சார் பதிவாளர் கோகிலாவிடம் தனது தாத்தா வழி சொத்தை நீங்கள் எப்படி வேறு நபருக்கு பத்திரப்பதிவு செய்தீர்கள் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகாத வார்த்தையால் திட்டி, மிரட்டல் விடுத்து, அரசு பணி செய்யவிடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து சார் பதிவாளர் கோகிலா, தா.பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். முசிறி டிஎஸ்பி செந்தில்குமார் உத்தரவின் பேரில் வழக்குப்பதிந்த போலீசார் மூர்த்தியை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags : Sir Registrar ,
× RELATED லால்குடி அருகே பூனைகளை விஷம் வைத்து கொன்றவர் கைது