தொட்டியம் தொகுதி அதிமுக மாஜி எம்எல்ஏ காத்தமுத்து காலமானார்

தொட்டியம், பிப்.17: தொட்டியம் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ காத்தமுத்து(92) நேற்று காலமானார்.

முன்னாள் எம்எல்ஏ காத்தமுத்து வயது முதிர்வால் முழு நேர அரசியலில் இருந்து சற்று ஒதுங்கி இருந்தார். அதே வேளை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வீட்டிலிருந்தே ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கி வெற்றி வாய்ப்பிற்கு தனது அனுபவத்தை வழிவகுத்து கொடுத்து வந்தார். மேலும் தொட்டியம் தாலுகா மகேந்திரமங்கலத்தில் தனது மகன்களுடன் வசித்து வந்த இவர் 1977 முதல் 1980 வரை தொட்டியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். 1972 முதல் 1982 வரை தொட்டியம் பகுதி அதிமுக ஒன்றிய செயலாளராகவும், 1985ம் ஆண்டில் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட ஆவின் சேர்மனாகவும், அதிமுக மாநில அமைப்பு செயலாளராகவும், ஆட்சி மன்ற குழு உறுப்பினராகவும் பணியாற்றி உள்ளார். அரசியலில் நன்கு அனுபவம் கொண்ட காத்தமுத்து எளிமையுடன் அனைவரிடமும் பழகும் தன்மை கொண்டவர்.
Advertising
Advertising

அரசியல் ஆர்வலர்களுக்கு இவர் நன்கு பரிச்சயமானவர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமானவராக இருந்தவர் காத்தமுத்து என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: