×

மாவட்ட ஊராட்சி குழு திமுக கவுன்சிலர் வாக்காளர்களுக்கு நன்றி

துறையூர், பிப்.17: மாவட்ட ஊராட்சி குழு திமுக கவுன்சிலர் தீபா சின்னராஜ் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாவட்ட ஊராட்சி குழு கவுன்சிலர் பதவிக்கு 1வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு தீபா சின்னராஜ் வெற்றி பெற்றார். இவர் துறையூர் அருகே உப்பிலியபுரம் ஒன்றியத்திலுள்ள தளுகை, நாகநல்லூர், கொப்பம்பட்டி, சோபனபுரம், வைரிசெட்டிபாளையம், கோட்டப்பாளையம், மாராடி ஆகிய ஊராட்சி பகுதிகளில் நேரில் சென்று வெற்றி பெற வைத்த பொதுமக்களுக்கு நன்றி கூறினார். நிகழ்ச்சியில் துறையூர் எம்எல்ஏ ஸ்டாலின்குமார், உப்பிலியபுரம் ஒன்றிய செயலாளர் முத்துச்செல்வன், உப்பிலியபுரம் ஒன்றிய குழு துணைத் தலைவர் கலைச்செல்வி, திருச்சி மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சோ.பா.கண்ணன், ஒன்றிய துணைச்செயலாளர் கர்ணன், சோபனபுரம் கவுன்சிலர் ராமச்சந்திரன், கொப்பம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன், வைரிச்செட்டிபாளையம் ஜெகநாதன், தளுகை பாலு, கொப்பம்பட்டி ஊராட்சி செயலாளர் பெரியசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags : District Panchayat Committee ,DMK Councilor ,voters ,
× RELATED வாக்காளர்கள் அதிகம் இருந்தும்...