பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி, பிப். 17: திருச்சி பெல் பிரிவின் மனமகிழ் மன்ற உள்ளரங்கில் ஊரக பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. திருவெறும்பூர் வாகன ஆய்வாளர் சுந்தரராமன் பங்கேற்று சாலை பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கான கூடுதல் பொது மேலாளர் திருமாவளவன் வாழ்த்தி பேசினார். பாய்லர் பிளாண்ட் பெண்கள் மேனிலைப்பள்ளி மற்றும் பாய்லர் பிளாண்ட் ஆண்கள் மேனிலைப்பள்ளியை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பங்கேற்றனர்.

Advertising
Advertising

Related Stories: