சூதாடிய 4 பேர் கைது ரூ.24 ஆயிரம் பறிமுதல்

திருச்சி, பிப். 17: திருச்சி அருகே சூதாடிய 4 பேர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடமிருந்து ரூ.24,000 பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் அருகே உள்ள கோரையாறு மணல் பகுதியில் சம்பவத்தன்று சீட்டு விளையாடுவதாக எ.புதூர் போலீஸ் நிலைய சிறப்பு எஸ்ஐ நடராஜனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பணம் வைத்து சீட்டு விளையாடி கொண்டிருந்த 4 பேரை வளைத்து பிடித்து அவர்களிடமிருந்து ரூ.24,300 பறிமுதல் செய்தனர். மேலும் 4 பேரையும் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினார். விசாரணையில் அரியமங்கலத்தை சேர்ந்த வெற்றிவேல் (35), ஆனந்த் (30), பாலக்கரையை சேர்ந்த சாதிக்பாட்ஷா (35), கார்த்தி (29) என்பது தெரியவந்தது. இதைதொடர்ந்து 4 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: