துப்பாக்கியை காட்டி செல்போன்களை பறித்து சென்றது தீவிரவாதிகளா? போலீசார் தீவிர விசாரணை

தா.பேட்டை அருகே

வங்கிக்குள் அத்துமீறி நுழைந்து
Advertising
Advertising

பெண்ணுக்கு தாலி கட்ட முயற்சி

தா.பேட்டை, பிப்.17: தா.பேட்டை அருகே மேட்டுப்பாளையத்தில் வங்கிக்குள் அத்துமீறி நுழைந்து அங்கு பணியாற்றும் பெண்ணுக்கு தாலி கட்ட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தா.பேட்டை அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் கீர்த்தனா (20). அப்பகுதியிலுள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் உதவியாளராக வேலை செய்து வருகிறார். திருச்சி வயலூர் பகுதியை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மகன் ஜெயபிரகாஷ்(27). இவர் திருச்சியில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் கீர்த்தனாவும், ஜெயப்பிரகாசும் நண்பர்களாக பழகி வந்தனர் என கூறப்படுகிறது. கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்துள்ளனர். நேற்று முன்தினம் மேட்டுப்பாளையம் வங்கியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த கீர்த்தனாவிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி ஜெயபிரகாஷ் வற்புறுத்தி, தகராறு செய்து அவர் கழுத்தில் தாலி கட்ட முயன்றுள்ளார். இதனை கீர்த்தனா தடுத்ததால் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி, சராமாரியாக ஜெயபிரகாஷ் தாக்கியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து கீர்த்தனா தா.பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சப்.இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிந்து ஜெயபிரகாஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். வங்கிக்குள் அத்துமீறி நுழைந்து இளம் பெண்ணுக்கு தாலி கட்ட முயன்ற வாலிபரின் செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: